Tag Archive: Tamil

அமுதம் சமையற்குறிப்பு

கொஞ்சம் தூண்டல் கொஞ்சம் அணைத்தல் அவ்வப்போது ருசித்தல் சிறிது கொதிக்கவிடுதல் லேசாய் பசியாற கொஞ்சம் பரிமாறல் இப்படியாக நீண்ட சமையலின் முடிவில் பரிமாறியதெல்லாம் அமுதமாய் இருந்தது Advertisements

சாயும் காலம்

விழித்திருக்க முடியாத இரவை நோக்கி நகர்கிறது என் வாழ்க்கை அவற்றில் உன் நினைவுகளும் என் துயரங்களும் தூங்கிப்போய்விடுகின்றன ஒரு நீண்ட அசதியான நாளின் முடிவில் நிகழ்கிறது நம் சந்திப்பு நீ அழகாய் இருக்கிறாய் உனை காதலிக்கிறேன் உன் நினைவுகளில் வாடுகிறேன் இப்படியான வார்த்தைகள் எங்கும் பரவிக்கிடக்கின்றன… Continue reading

புரிந்து கொள்ளப்படாததும் புரிந்து கொள்ளப்படாதவர்களும்

தக்கை மனிதர்கள் (நன்றி: வினவு) சமிபகாலமாக புத்தகம் வாசிப்பது குறைந்து கொண்டே வருகிறது, வேலை நிமித்தம் புத்தகங்கள் வாசிப்பது அதிகரித்திருந்தாலும் அவை பணம் சம்பாதிப்பதற்கு ஏதுவாக இருக்கிறதே ஒழிய எந்த ஒரு படிப்பினைகளையும் நமக்கு அளிப்பதில்லை. புத்தகம் வாசிப்பது குறையும் போது நான்  தக்கை மனிதனாக… Continue reading

Unforgettable

திருமணம் என்பது நீ தூங்கும் அழகை ரசிப்பதற்கான நுழைவுச் சீட்டு         வெண்ணிற ஆடையணிந்து கையில் நட்சத்திரத்துடன் மிதந்து கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்திருந்தேன் தேவதைகளை என் T-Shirt அணிந்து கைபிடித்து தூங்கவும் செய்வார்கள் என்பதை உணர்கிறேன் இப்போதுதான் நீ தோள்… Continue reading

முட்டாள்களின் உலகம்

முட்டாள்களின் உலகத்தில் நமக்கு மட்டும் என்றைக்கும் இடமிருப்பதில்லை எனக்கு தெரிந்த ஒருவனுக்கு தனக்கு தெரிந்தது தெரியவில்லை என்பதற்காக இடம் கொடுக்கப்பட்டது தவறான நேரத்தில் தவறான விதத்தில் எனது தவறை சுட்டிக்காட்டியதற்காக ஒருவனுக்கும் என்ன தான் சரியான விதத்தில் சரியான நேரத்தில் என் தவறை சுட்டிக்காட்டினாலும் சரியான… Continue reading

எழுதி என்னவாகப் போகிறது

எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றே நினைக்கிறேன் அவை கோர்வையாய் அழகாய் அமைவதில்லை அவற்றால் தெளிவாய் எதையும் சொல்ல முடிந்ததில்லை யாருடைய நினைவிலும் நில்லாத ஒரு புலம்பலை போலவே அமைந்துவிடுகின்றன எழுத்துக்கள் கொடூரமானவை அவற்றில் தூங்காத இரவின் பெருமூச்சு கலந்திருக்கின்றன கடந்த காலத்தின் பாவகணக்குகள் தீர்க்கப்படும் ஒரு நள்ளிரவு… Continue reading

மரியாளும் நீயும்

மெல்லிய இசை இதமாய் அரவணைத்து ஆடும் ஜோடிகள் இவற்றிற்கு இடையே நண்பர்கள் புடைசூழ நீ உன் கண்களில் தெரிந்த சோகமும் முகத்தில் வழிந்தோடும் ஏக்கமும் புனிதத்தில் சிக்குண்டு அன்பிற்காய் ஏங்கி தவித்த மரியாளை ஒத்தே இருந்தது

நினைவு

நீ அழகாய் அலங்கரித்துக் கொண்டு தோழிகள் புடைசூழ புன்னகையுடன் சென்றிருக்கலாம் மணமேடைக்கு திரைபடங்களில் காண்பிப்பதுபோல் கடைசிவரை என் நினைவுகளுடன் அழுதுகொண்டே சென்றிருப்பாய் என்று கற்பனை செய்துகொள்ளவே விரும்புகிறேன் நான் அனுப்பிவிடாதே புகைப்படங்களை அவை உடைத்து போகக்கூடும் என் கற்பனைகளை காலத்தின் ஓட்டத்தில் குவிந்து போன நினைவுகளுக்கிடையில்… Continue reading

யாரும் கவனித்ததாக தெரியவில்லை

நான் கடைசியாய் எழுத ஆரம்பித்ததை முடித்து விடலாம் என்றே நினைக்கிறேன் கவிதைகளோ கவிதை என்ற பெயரிலோ எழுதுவதற்கு பயமாய் இருக்கிறது அவை கேள்விகளால் எழுத்தை மௌனிக்க செய்கின்றன எதைப்பற்றி எழுதுவது எதில் தொடங்கி எதில் முடிப்பது மனப்பிறழ்வுக்கு வழிவகுக்குமா தற்கொலைக்கு தள்ளிவிடுமா முடிவில்லாத வேதனையின் தொடர்ச்சியாக… Continue reading

  • Archives

  • Tags

  • Advertisements