Category Archive: Tamil

அமுதம் சமையற்குறிப்பு

கொஞ்சம் தூண்டல் கொஞ்சம் அணைத்தல் அவ்வப்போது ருசித்தல் சிறிது கொதிக்கவிடுதல் லேசாய் பசியாற கொஞ்சம் பரிமாறல் இப்படியாக நீண்ட சமையலின் முடிவில் பரிமாறியதெல்லாம் அமுதமாய் இருந்தது Advertisements

கல்லறை வரிகள்

உலகின் முதன்மையான கொடுமைகளில் ஒன்றாக என்னுடன் வாழ்வது அறிவிக்கப்பட்ட நாளொன்றில் தெரிந்தோ தெரியாமலோ தொடர்பிலிருந்தாய் நீ அவ்வப்போது என்னை அழைத்துக்கொண்டே இரு தொடர்ந்து தொடர்பிலே இரு என் மரணத்திற்காக காத்துக்கொண்டே இரு என் காதலன் இங்கு உறங்குகிறான் என்றெழுதி என் கல்லறையில் கையெழுத்திட்டு களங்கம் துடைத்துவிட்டுப்போ… Continue reading

குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) – Fyodor Dostoyevsky

Its an amazing book and took a while to read and i don’t think writing about the book is going to be any easier.This post will be edited to add more details in… Continue reading

சாயும் காலம்

விழித்திருக்க முடியாத இரவை நோக்கி நகர்கிறது என் வாழ்க்கை அவற்றில் உன் நினைவுகளும் என் துயரங்களும் தூங்கிப்போய்விடுகின்றன ஒரு நீண்ட அசதியான நாளின் முடிவில் நிகழ்கிறது நம் சந்திப்பு நீ அழகாய் இருக்கிறாய் உனை காதலிக்கிறேன் உன் நினைவுகளில் வாடுகிறேன் இப்படியான வார்த்தைகள் எங்கும் பரவிக்கிடக்கின்றன… Continue reading

புரிந்து கொள்ளப்படாததும் புரிந்து கொள்ளப்படாதவர்களும்

தக்கை மனிதர்கள் (நன்றி: வினவு) சமிபகாலமாக புத்தகம் வாசிப்பது குறைந்து கொண்டே வருகிறது, வேலை நிமித்தம் புத்தகங்கள் வாசிப்பது அதிகரித்திருந்தாலும் அவை பணம் சம்பாதிப்பதற்கு ஏதுவாக இருக்கிறதே ஒழிய எந்த ஒரு படிப்பினைகளையும் நமக்கு அளிப்பதில்லை. புத்தகம் வாசிப்பது குறையும் போது நான்  தக்கை மனிதனாக… Continue reading

Unforgettable

திருமணம் என்பது நீ தூங்கும் அழகை ரசிப்பதற்கான நுழைவுச் சீட்டு         வெண்ணிற ஆடையணிந்து கையில் நட்சத்திரத்துடன் மிதந்து கொண்டிருப்பார்கள் என்று கற்பனை செய்திருந்தேன் தேவதைகளை என் T-Shirt அணிந்து கைபிடித்து தூங்கவும் செய்வார்கள் என்பதை உணர்கிறேன் இப்போதுதான் நீ தோள்… Continue reading

முட்டாள்களின் உலகம்

முட்டாள்களின் உலகத்தில் நமக்கு மட்டும் என்றைக்கும் இடமிருப்பதில்லை எனக்கு தெரிந்த ஒருவனுக்கு தனக்கு தெரிந்தது தெரியவில்லை என்பதற்காக இடம் கொடுக்கப்பட்டது தவறான நேரத்தில் தவறான விதத்தில் எனது தவறை சுட்டிக்காட்டியதற்காக ஒருவனுக்கும் என்ன தான் சரியான விதத்தில் சரியான நேரத்தில் என் தவறை சுட்டிக்காட்டினாலும் சரியான… Continue reading

எழுதி என்னவாகப் போகிறது

எழுதுவதை நிறுத்திவிடலாம் என்றே நினைக்கிறேன் அவை கோர்வையாய் அழகாய் அமைவதில்லை அவற்றால் தெளிவாய் எதையும் சொல்ல முடிந்ததில்லை யாருடைய நினைவிலும் நில்லாத ஒரு புலம்பலை போலவே அமைந்துவிடுகின்றன எழுத்துக்கள் கொடூரமானவை அவற்றில் தூங்காத இரவின் பெருமூச்சு கலந்திருக்கின்றன கடந்த காலத்தின் பாவகணக்குகள் தீர்க்கப்படும் ஒரு நள்ளிரவு… Continue reading

மரியாளும் நீயும்

மெல்லிய இசை இதமாய் அரவணைத்து ஆடும் ஜோடிகள் இவற்றிற்கு இடையே நண்பர்கள் புடைசூழ நீ உன் கண்களில் தெரிந்த சோகமும் முகத்தில் வழிந்தோடும் ஏக்கமும் புனிதத்தில் சிக்குண்டு அன்பிற்காய் ஏங்கி தவித்த மரியாளை ஒத்தே இருந்தது

Nothing to Say ( இன்று இல்லெங்கிலும் நாளை )

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன எங்கள் இமைகள் கவிந்துள்ளன எங்கள் உதடுகள் அண்டியுள்ளன எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம் எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக எங்கள் முதுகில் கசையால் அடிக்குக எங்கள் முதுகுத் தோல் பிய்ந்துரிந்து… Continue reading

  • Archives

  • Tags

  • Advertisements