கல்லறை வரிகள்

tears quotes images photos wallpapersஉலகின் முதன்மையான கொடுமைகளில் ஒன்றாக
என்னுடன் வாழ்வது
அறிவிக்கப்பட்ட நாளொன்றில்
தெரிந்தோ தெரியாமலோ
தொடர்பிலிருந்தாய் நீ

அவ்வப்போது என்னை
அழைத்துக்கொண்டே இரு

தொடர்ந்து தொடர்பிலே இரு

என் மரணத்திற்காக
காத்துக்கொண்டே இரு

என் காதலன்
இங்கு உறங்குகிறான்
என்றெழுதி
என் கல்லறையில்
கையெழுத்திட்டு
களங்கம் துடைத்துவிட்டுப்போ

 

Advertisements