குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) – Fyodor Dostoyevsky

Its an amazing book and took a while to read and i don’t think writing about the book is going to be any easier.This post will be edited to add more details in the coming days

மிகச்சிறந்த ரஷ்ய எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் Fyodor Dostoyevsky தன் வாழ்நாளில் இன்பதுன்பங்களின் எல்லைவரை சென்று பார்த்துவிட விரும்பியவராக அறியப்படுகிறார் இவருடைய மிகச்சிறந்த படைப்புகள் அனைத்தும் Anna Grigoryevna Snitkinaவை திருமணம் செய்துகொண்டபிறகே வெளிவந்தன. Karl Marxக்கு ஒரு ஜென்னியை போல Anna வாழ்வின் பாரங்கள் அனைத்தையும் சுமந்தவளாக அறியப்படுகிறாள். இவருடைய கதையில் வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும் இவருடைய வாழ்க்கையிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கிறது, பெரிதும் அறியப்பட்ட இவருடைய மற்றைய படைப்புகள் ‘The Idiot’,’The Brothers Karamazov’.

குற்றமும் தண்டனையும் முக்கிய கதாபாத்திரங்கள்

Rodion Romanovich Raskolnikov: கதையின் நாயகன் ஏழை மாணவன்

Sofia Semyonovna Marmeladova(Sonia): வறுமையினால் விபசாரத்திற்கு தள்ளப்படும் கதையின் நாயகி

Katerina Ivanovna Marmeladova: சோனியாவின் சித்தி Marmeladovaக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டவள்.Dostoyevskyக்கு பிடித்த கதாபாத்திரம்

Alyona Ivanovna: கொலை செய்யப்படும் அடகுக்கடை நடத்துபவள்

 கதை கரு:

 தான் எழுதிய கட்டுரை ஒன்றில் நெப்போலியன் போன்றோரை மேற்கோள்காட்டி மனிதர்களை சராசரியானவர்கள் அசாதாரணமனவர்களாக பிரிக்கிறான் Raskolnikov.அசாதாரணமானவர்கள் சட்டங்களை மீறவும் சராசரியானவர்களுக்கான சட்டங்களை வகுக்கவும் உரிமை உள்ளவர்கள் இவர்கள் தம் குற்றங்களை மனதளவில் எளிதாய் கடந்துவிடுபவர்கள். Raskolnikov தன்னை அசாதாரணமானவனாக கருதிக்கொண்டு தன் வறுமையில் இருந்து விடுபட Alyonaவை ஒரு அற்ப பதராக கருதி கொலை செய்துவிடுகிறான் அப்போது தற்செயலாக நுழைந்துவிடும் அவளுடைய தங்கையையும் கொலைசெய்ய நேரிடுகிறது அதன்பிறகு Raskolnikovவின் மனதில் நிகழும் போராட்டமே கதையாக அமைகிறது.

Advertisements