புரிந்து கொள்ளப்படாததும் புரிந்து கொள்ளப்படாதவர்களும்

தக்கை மனிதர்கள் (நன்றி: வினவு)
சமிபகாலமாக புத்தகம் வாசிப்பது குறைந்து கொண்டே வருகிறது, வேலை நிமித்தம் புத்தகங்கள் வாசிப்பது அதிகரித்திருந்தாலும் அவை பணம் சம்பாதிப்பதற்கு ஏதுவாக இருக்கிறதே ஒழிய எந்த ஒரு படிப்பினைகளையும் நமக்கு அளிப்பதில்லை. புத்தகம் வாசிப்பது குறையும் போது நான்  தக்கை மனிதனாக உருமாரிக்கொண்டிருக்கிறேன்  என்ற  உணர்வு மேலோங்குகிறது அது எமக்கே எம் மீதான ஒரு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. ஒருகாலத்தில் இந்தியா ஒரு தேசம் என்று தவறாக புரிந்துகொண்டதையும் இந்திய ராணுவம் ஒரு உன்னதமான ராணுவம் என்று வக்காலத்து வாங்கியதையும் இந்துமதம் ஒருவரின் ஆதி மதம் என்று நினைத்து இருந்ததையும் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது அவற்றை எல்லாம் ஒரு வருடத்திற்குள்  புரட்டி போட்டது இந்த வாசிப்புகள். புத்தகங்கள் வாசிப்பது ஒரு தெளிவான சிந்தனையையும் அமைதியையும் ஏற்படுத்துகிறது இன்னும் சொல்லப்போனால் நாம்  மனிதனாக   இருப்பதற்கு காரணம் இந்த வாசிப்புகள். ஒன்றிலிருந்து ஒன்றை பிரிப்பது பல்வேறு தளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே நாமும் நம்மை சார்ந்தவர்களும் உணரவேண்டியது அவசியமாகிறது.

மே மாதம்

 

 

 

 

 

 

 

ஒரு இனத்தின் பெரும்பகுதி துடைத்து எறியப்பட்ட காலகட்டம் தூக்கமில்லா இரவுகளும் சொல்லமுடியாத வேதனைகளும் நிறைந்தது. போராட்ட உணர்வும் சிந்திக்கும் திறனும் இல்லாதவர்கள் என்பதால் தான் என்ன செய்யவேண்டும் என்பது முதற்கொண்டு எழுதிவைத்துவிட்டு செத்துப்போனான் முத்துக்குமார் ஆனால் அதையும் தன் அரசியல் இலாபத்திற்காக கெடுத்துவிட்டார்கள் இந்த வைகோவும், நெடுமாறனும்,திருமாவளவனும்.முத்துக்குமார் அன்று சொல்லியது போல பெரும் போராட்டமாக வெடித்திருந்தால் எத்தனையோ மக்களை காப்பாற்றி இருக்கலாம் ஏன் தேசிய தலைவரையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றியிருக்கலாம் ஆனால் அன்றைக்கு ஆண்மை இல்லாமல் விட்டுவிட்டு  இன்னும் உயிரோடு இருப்பதா சொல்லி பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் . மீசையை முறுக்கிக்கொண்டு ஈழத்தை  வைத்து பிழைப்பு நடத்தும் திருமாவளவன் ராஜபக்சே முன்னால் கைகெட்டி நின்றது மட்டுமில்லாது சோனியாவுடன் கொஞ்சி குலாவிட்டு வந்திருக்கிறார் பெரியாரின் பேரன் பிரபாகரனின் தம்பி என்று சொல்லிக்கொண்டு திரியும் சீமான் பெரியாரை குறைசொல்லி  ராஜபக்சே போன்ற அரக்கனாகிய நரேந்திர மோதியை ஆதரித்து கடைசியில் இன்று சுஷ்மா சுவராஜின் பேச்சில் மூக்குடைபட்டு நிற்கிறார். கம்யுனிசம் பேசும் கம்யுனிஸ்டுகள் இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா என்று நினைக்கும் அளவிற்கு அருவெருப்பாய் நடந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அந்த தூங்கா  இரவுகளையும் வேதனையான நாட்களையும் நாங்கள் மறந்துவிடவில்லை. மொத்தத்தில் ஈழத்து பெண்கள் எல்லாம் ஆண்களை இழந்தார்கள் தமிழகத்து ஆண்கள் எல்லாம் ஆண்மையை இழந்தார்கள்.

இவையெல்லாம் பலருக்கு ஒரு செய்திபோல ஆகிவிட்டது ஆனால் பட்ட வேதனைகள் என்றைக்கும் மறக்காது.

அப்துல்கலாம் எனும் அரசியல்வாதி
தமிழகத்து தக்கை மனிதர்களின் அறிவுஜீவி இவர், தனக்கு இன்னொரு முறை ஜனாதிபதி பதவி வேண்டும் என்பதற்காக தமிழர் பிரச்சனையை தீர்கபோவதாக சொல்லி இலங்கை சென்றதும் பின்னர் அணுவுலை பாதுகாப்பானது என்று சொல்லி தனக்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தான் ஒரு அரசியல்(வி)வாதி என்று நிருபித்திருக்கிறார். பல தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் உண்மையை மறுத்துக்கூறும் இவருக்கும் ராஜபக்சேக்கும் எந்த ஒரு பெரிய வேறுபாடும் இல்லை.

அலக்ஸ்பால் மேனன்
அலக்ஸ்பால் மேனன் கடத்தலுக்கு நாமும் ஏதோ ஒருவகையில்  காரணமாய் இருக்கிறோம். அலக்ஸ்பால் மேனனை விட எத்தனையோ நல்லவர்கள் தினமும் கடத்தபடுகிறார்கள் அவர்கள் வீட்டு பெண்கள் சிதைகப்படுகிறார்கள் அவர்கள் வீடுகள் கொளுத்தபடுகின்றன கடத்தப்பட்டவர்கள்  திரும்பி வருவதே இல்லை இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டதன் விழைவே இன்று அலக்ஸ்பால் மேனன் கடத்தலில் வந்து நிற்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதை செய்வது அரசு ஏதோ மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றதால் அலக்ஸ்பால் மேனன் உயிரோடு திரும்பி இருக்கிறார் இதுவே அரசாக இருந்திருந்தால்

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை நாம் தக்கை மனிதர்களாகிக்கொண்டிருப்பது. இன்று வெறும் பரப்புரைகள் மட்டுமே உண்மையாகிப்போகிறது இதனால்தான்  அப்துல்கலாம் போன்ற அரசியல்வாதிகளும் அம்பானி நாராயணமூர்த்தி டாட்டா போன்று மக்களை சுரண்டி பிழைப்பவர்களும் தலைவர்களாகிப்போனார்கள். நாமெல்லாம் வெறும் தக்கை மனிதர்கள் என்பதால் தான் இவர்கள் மக்கள் தொடர்பு நிறுவனங்களுக்கு காசைவிட்டெறிந்து பரப்புரை மேற்கொள்கிறார்கள் இதன் ஒருபகுதிதான் ராசா கைதுக்கு சந்தோசப்படும் நீங்கள் டாட்டாவும் அம்பானியும் கைதுசெய்யப்படாததை பற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை.ஹிந்தி நம் தேசிய மொழி என்று நம்பிக்கொண்டிருப்பதும் இந்தியா ஒரு தேசம் என்று நம்பிகொண்டிருப்பதும் ஹிந்தி கற்றுக்கொள்ளவில்லை என்றால் பிழைக்க முடியாது என்று நினைப்பதும் வடமாநிலங்கள் அனைத்தும் ஹிந்தியை பேசுகின்றன என்று நம்புவதும் வெறும் பரப்புரையால் மட்டுமே ஒரு திட்டமிட்ட தாக்குதல் நம்மீது நடக்கிறது என்பதை அறியாமல் இருப்பது நம் அழிவுக்கே வழிவகுக்கும்.

வினவில் வெளிவந்த இந்த கட்டுரையை பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
வாசிக்கவேண்டியது மிகவும் அவசியமாகிறது ஒருமுறை அல்ல எப்போதெல்லாம் நாம் தக்கை மனிதனாக மாறிக்கொண்டிருக்கிறோமோ அப்போதெல்லாம் நாம் வாசித்து நம்மை நாமே திருத்திக்கொள்வது அவசியமாகிறது இல்லையென்றால் நம் இனமும் மொழியும் வரலாறு இல்லாத அநாதைகளாகிவிடுவோம்.

Advertisements