Unforgettable

திருமணம் என்பது
நீ தூங்கும் அழகை ரசிப்பதற்கான
நுழைவுச் சீட்டு

 

 

 

 

வெண்ணிற ஆடையணிந்து
கையில் நட்சத்திரத்துடன்
மிதந்து கொண்டிருப்பார்கள்
என்று கற்பனை செய்திருந்தேன்
தேவதைகளை

என் T-Shirt அணிந்து
கைபிடித்து தூங்கவும் செய்வார்கள்
என்பதை உணர்கிறேன்
இப்போதுதான்

நீ
தோள் சாய்ந்து நிம்மதியாய் தூங்கும்போது
பிடித்திருந்தது
என்னையே எனக்கு

 

 

 

உனைவிட்டு பிரிவதற்கான
கடைசிநேர இதயத்துடிப்பில்
கேட்கிறது
கடிகார முள்ளின் சப்தம்