முட்டாள்களின் உலகம்

Laughing at his own imageமுட்டாள்களின் உலகத்தில்
நமக்கு மட்டும்
என்றைக்கும் இடமிருப்பதில்லை

எனக்கு தெரிந்த ஒருவனுக்கு
தனக்கு தெரிந்தது
தெரியவில்லை என்பதற்காக
இடம் கொடுக்கப்பட்டது

தவறான நேரத்தில்
தவறான விதத்தில்
எனது தவறை சுட்டிக்காட்டியதற்காக
ஒருவனுக்கும்

என்ன தான்
சரியான விதத்தில்
சரியான நேரத்தில்
என் தவறை சுட்டிக்காட்டினாலும்
சரியான விதத்தில்
தன் நேரத்தை செலவிடாததற்காக
ஒருவனுக்கும்
இடம்  அளிக்கப்பட்டிருந்தது

முட்டாள்களின் உலகத்தில்
நமக்கு மட்டும்
என்றைக்கும் இடமிருப்பதில்லை

Advertisements