காதலி Wanted


அவசர அவசரமாக
எனக்கொரு
காதலி தேவைப்படுகிறது.

பாதியாய் மறைக்கப்பட்ட
மார்பகங்களும்
பாதிக்கும் குறைவாய்
மறைக்கப்பட்ட உடல்களும்
கலவரப்படுத்திப் போகிறது
என் ஹார்மோன்களை

சில முத்தங்களும்
சில சத்தங்களும்
தனித்திருப்பதற்கான
தண்டனையாய் படுகிறது

online’ல் பார்க்கும் ஒவ்வொரு
நொடியும் பேசத்துடிக்கிறது
மனது
பேசாமல் விட்ட விசயங்களும்
பேசுவதற்காய் சேர்த்து வைத்தவைகளும்
அழுத்திப்போகிறது மனதை

மீறி
பேசியவைகள் எல்லாம்
சச்சரவுகளில் முடிந்தது
பேசாதவைகள் எல்லாம்
கற்பனைகள் என ஒளிந்து
கொண்டது

அவ்வப்போது எழுதியாகிவிட்டது
உனக்கான காதலையும்
எனக்கான வலிகளையும்

போதும் வா
கிளம்பி வா
வந்து தணித்துப் போ எல்லாவற்றையும்
என் காதலியாய்

பின்குறிப்பு:
தேர்வுகள் இருப்பதால் june23’க்கு அப்புறம் கிளம்பி வரவும்

– பிரேம்

Posted by Picasa
Advertisements