மொக்கை

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்கிறேன் அவனை…வெகு நாட்களாக
எழுதவில்லை..காயப்படவில்லை…கண்ணீர் சுரப்பைகள் கூட வற்றிவிட்டதாகவே
உணர்கிறேன்..கடைசியாய் அனுமதிக்கப்படுமுன் அவன் முனங்கியவைகளில் சிலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.ஞானசேகர் மொழியில் சொல்வதென்றால் “மொக்கை” என்றாலும் வேறு வழியில்லாமல் பதிவு செய்கிறேன்.இதுவே அவனுடைய கடைசியாய் இல்லாமல் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.மீண்டுவிடுவான் என்ற நம்பிக்கையில்…..

**************************
யார் யாருக்கெல்லாமோ
உனை பிடித்திருப்பதாய்
சொல்லிக் கொண்டிருக்கிறாய்

உனக்கு பிடித்திருக்கிறதா
எனக் கேட்பதாகவே படுகிறது எனக்கு.
****************************
இன்னும் எத்தனை வருடங்கள் தான்
பார்க்காமல் இருப்பது

ஒருமுறைதான் வந்து
பார்த்துவிட்டு போயேன்
பத்திரமாய் இருக்கிறதா
உன் நினைவுகள் என்று.
***************************************************

பைக்கில்
கொஞ்சம் நெருங்கி தான்
உட்காரேன்
பார்த்துத்தான் விடுவோம்
எவ்வளவு தான் துளைக்கிறதென்று

*****************************************

Advertisements