காணவில்லை

 

hmmmm…காணவில்லை
என்ன செய்வது
எங்கு தேடியும் காணவில்லை,
உன் நினைவுகளின்
சாட்சிகள்

எங்கே போயின
எனக்கான உன் முகவரியும்
உனக்கான என் இதயவரியும்
சுமந்த குறிப்பேடுகள்

எல்லாம் தொலைந்துவிட்டது
உன் முகவரிகூட
இல்லாமல் நிற்கிறேன்.

பாவம்
அநாதையாக அலைகிறது
மனது

எனக்காக நீ எழுதிய
கடிதங்கள் எங்கே??
மனது வலித்த போதெல்லாம்
கண்கள் எழுதிப்பார்த்த
உன் கடிதங்கள்
எங்கே

எங்கே போனது
என் கண்ணீரின் சாட்சிகள்

“அதெல்லாம் எதுக்கு
இனி அதெல்லாம் வச்சி
என்ன பண்ணப்போற”

என்னவென்று பதில் சொல்வது
இல்லை!?
என்ன உணர்ச்சி காட்டுவது!!?

எரிக்கப்பட்டுவிட்டதாம்.
உன் சம்பந்தப்பட்ட எல்லாமே
எனைத் தவிர.

– பிரேம் Posted by Picasa

Advertisements