காதல் தோழி

தோழியிடம் சொல்வதற்கென்ன??
தைரியமாய் சொல்லிப்போ
என்னை காதலிப்பதாய்

உன் உணர்ச்சிகளின்
வடிகால் தானே நான்
இதில்
காமத்திற்கு மட்டுமென்ன விதிவிலக்கு!!?

புரியாத இரவுக்கான எதிர்பார்ப்பில்
புரிந்து கொண்டதாக செய்யப்படும்
(திரு)மணங்களில் விருப்பமில்லை
எனக்கு
வா
புரிந்துகொள்வோம்
நம்
தேவைகளை
அறிந்து கொள்வோம்
நம் மனங்களை.

மனிதனை கொன்று
சம்பிரதாயம்
காக்கத் துடிப்பவர்களுக்கான
தண்டனையாய்
தோற்கடிப்போம்
சம்பிரதாயத்தை

(திரு)மணத்தினால் அல்லாமல்
மனத்தினால் பந்தம்
செய்து கொள்வோம்

விரும்பும் வரை

நீ உன் வீட்டிலும் நான்
என் வீட்டிலும்
தங்கிக்கொள்வோம்

உனக்குத் தேவை
என்கிறபோது
நானும்
எனக்குத் தேவை என்கிறபோது
நீயும்
சமரசம் செய்துகொள்வோம்
விருப்பு வெறுப்புகளை
தீர்த்துக் கொள்வோம்
அது இச்சையே ஆனாலும்.

நீ
எனக்காக பேசு..
பெண்ணியம் பேசு
கலவியில் கூட
வேண்டுவன கேள்
என பேசு.

மனைவி தோழியானால்
ஆச்சர்யம்
தோழி மனைவியானால்
அதிர்ஷ்டம்
சொல்லிப்போ
காதலிப்பதாய்

இப்போதும் நான் உன்
தோழி
இப்போது தான் நான்
தோழி
தைரியமாய் சொல்லிப்போ
என்னை காதலிப்பதாய்

Advertisements