என் தோழிக்கு சமர்ப்பணம்

கூட்டத்தில் தள்ளி நின்று
தேடுகிறது காதல்
தேடி அலைகிறது நட்பு!!

உன் செல்பேசியின்
மௌனம்
உரக்கச் சொல்லிப்போகிறது!!??
என் அருகாமை
உனக்குத் தேவை என்பதை..

“டேய் எப்படிடா இருக்க”
என்ற வார்த்தைகளின்
இடைவெளி
உணர்த்திப்போகிறது…!!!
நீ என் அழைப்புக்காக
காத்திருந்த நேரத்தை…

“வழியிறான்”
என்று சொல்லாமல்
எத்தனை முறை தவிர்த்தாயோ??
என்னை யாரும் சொல்லிவிடுவார்கள்
என்ற பயத்தில்!!

“நட்புக்காலம்”
வாசித்த பிறகுதான் புரிந்தது
கவனிக்கப்படுகிறோம் நாம்…!!??
நம்மை அறியாமலே..!!!

உனக்கு உணர்த்தப்பட்டபிறகே
தெரிவிக்கப்படுகின்றன
என் கஷ்டங்கள்
நம் நண்பர்களுக்கு!!??

யோசித்திருக்கிறாயா
ஏனென்று??

இனக்கவர்ச்சி என்று
சொல்லிவிட்டு போகலாம்
மற்றவர்கள்

ஆனாலும்
நிறப்பாமலே விட்டுவிடுவோம்
இதற்கான பதிலை!!!

கண்டுபிடித்து விடாமலா
போகப்போகிறார்கள்
தாயிடம் மகனும்
தந்தையிடம் மகளும்
ஒன்றிப்போவது
ஏன் என்று!!

அன்றைக்கு
எழுதிக்கொள்வார்கள்
அவர்களாகவே

எனக்கு பிடித்ததை
அணியச் சொல்கிறது
காதல்
உனக்கெது நன்றாக இருக்கும்
என்று
பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கிறது
நட்பு …!!

(தொடரும்….)

தொடர்ந்து கொண்டுதான்
இருக்கும்
உனக்கான என் கவிதையும்…..
நட்பும்….

-பிரேம் குமார்

Advertisements